குழந்தைகள் பாதுகாப்பு குறித்து திறன் வளர்ப்பு பயிற்சி

67பார்த்தது
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பாக வருவாய் அலுவலர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலருக்கான ஒரு நாள் திறன் வளர்ப்பு பயிற்சி வட்டாட்சியர் சேதுநம்பு தலைமையில் நடைபெற்றது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் துரை முன்னிலை வகித்தார் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் ஆற்றுப்படுத்துநர் ஜாய் சாராள் குழந்தைகள் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்டுள்ள குழுவில் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார். இளைஞர்நீதி குழுமம் மேனாள் உறுப்பினர் பேபி கலாவதி இளஞ்சிறார் மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தைகள் முன்னேற்றத்தில் விஏஓக்கள் பங்கு குறித்து எடுத்துரைத்தார். காரைக்குடி வழக்கறிஞர் பிரியா குழந்தைகள் தொடர்பான சட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தார், வருவாய் அலுவலர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி