திரையரங்கு உரிமையாளர் வீட்டில் திருட்டு

579பார்த்தது
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செக்காலை சாலையில் பாண்டியன் திரையங்கு உள்ளது. அதற்கு பின்புறம் திரையரங்கு உரிமையாளர் பாண்டியனுக்கு சொந்தமான வீடு உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாடின்றி இந்த வீடு பூட்டி கிடந்தது.
இந்நிலையில் அந்த வீட்டில் இருந்த ஏசி பிரிட்ஜ் மற்றும் வீட்டில் உள்ள அனைத்து விலை உயர்ந்த பொருட்களும்,
புகைப்பட கேமராக்கள், கலைப்பொருட்கள் என பல லட்சம் ரூபாயிலான பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது குறித்து திரையரங்கு உரிமையாளர் பாண்டியன் காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அதனை தொடர்ந்து திருட்டு சம்பவம் குறித்து DSP பிரகாஷ் தலைமையிலான தனிப்படையினர் தீவிர விசாரணை செய்து வந்தனர் இந்நிலையில் தனிப்படை காவல்துறையினருக்கு
கழனிவாசல் புதுரோட்டைச் சேர்ந்த 10 வயது முதல் பல்வேறு திருட்டு வழக்கு மற்றும் கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய நாகராஜன் (எ) நடுப்பக்கம். நாகராஜ் (19), ஜீவா நகரைச் சேர்ந்த அபிஷேக் (23) ஆகியோர் சிறையிலிருந்து விடுதலையாகி தற்போது அப்பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு கஞ்சா மற்றும் மதுபானங்களை தாராளமாக வாங்கி கொடுத்து வந்துள்ளனர் இது குறித்த தகவல் தனிப்படை காவல்துறையினருக்கு கிடைத்ததை தொடர்ந்து நாகராஜ் என்ற நடுப்பக்க நாகராஜ் வீட்டில் காவல்துறையினர் திடீர் சோதனையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

தொடர்புடைய செய்தி