சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கருதாவூரணி பகுதியை சேர்ந்த நீலமேகம் மகன்கள் ரமேஷ் மற்றும் ராஜ்குமார் ஆகிய இருவரும் வீட்டில் மது போதையில் வாய் தகராறு ஏற்பட்டு சண்டையிட்டதாக கூறப்படுகிறது. இதில் அண்ணன் ரமேஷ் தம்பி ராஜ்குமாரை கீழே தள்ளியதில் அம்மி கல்லில் தலை அடிபட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இச்சம்பவம் அறிந்த தேவகோட்டை டிஎஸ்பி கௌதம் தலைமையில் டவுன் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அண்ணனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.