சிவகங்கை மாவட்டம், சிவகங்கை ஐயப்பன் சன்னிதியில் மண்டலபூஜை நடைபெற்றதுடன் ஜண்டே மேளம் முழங்க கதகளி, காளி உருவங்கள் தரித்து கலைஞர்கள் முன்னே செல்ல உற்ச்சவர் திருவீதிஉலா சென்றதை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.
சிவகங்கை நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது காசி விஸ்வநாதர் ஆலயம். சிவகங்கை தேவஸ்தான சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட இத்திருக்கோயிலில் உள்ள ஐயப்ப சுவாமிக்கு மண்டல பூஜை வெகு விமர்ச்சியாக கொண்டாடப்பட்டது. முன்னதாக சிவகங்கை ராணி சாகிபா மதுராந்தகி நாச்சியார் வந்து மண்டலபூஜையை துவக்கி வைத்து சாமி தரிசனம் செய்து சென்றார். மண்டல பூஜையை முன்னிட்டு நாள்தோறும் ஐயப்ப சுவாமிக்கு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. நிறைவு விழாவான இன்று ஐயப்ப உற்சவர் தேரில் அலங்கரிக்கப்பட்டு தேரோடும் திருவீதியில் ஊர்வலம் வெகு விமர்சையாக நடைபெற்றது. அதில் கேரள சண்டே மேளம் முழங்க, கதகளி, காளிகள் என பலவிதமான சுவாமி வேடமிட்டு ஊர்வலம் வந்தனர். ஊர்வலத்தில் மயிலாட்டம், சிலம்பாட்டம், கதகளி, ஆடியவாரு வண்ண வண்ண விளக்குகளுடன் நேர்த்தியாக கடவுள் வேடமிட்டு நடனமாடியவர்களை பக்தர்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். வெகு உணர்ச்சியாக நடைபெற்ற மண்டல பூஜை விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.