சிவகங்கை மாவட்டம் சிவகங்கையில்
சிவகங்கை வட்டார போக்குவரத்து மைதானத்தில் லைசன்ஸ் எடுக்க வந்தவர்கள் புதிய வாகனங்களுக்கு புதிய எண்கள் வாங்க வந்தவர்கள், மற்றும் வாகனஓட்டிகளிடம் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் மாணிக்கம் வாகனங்களில் செல்வோர் சாலைகளில் செல்லும் போது கடைபிடிக்க வேண்டியவை விதிமுறைகள் என்னென்ன என்பதை எடுத்துரைத்தார். மேலும் விபத்துஏற்படாமல் தடுப்பதற்கு எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார் மேலும் சாலை பாதுகாப்பு வாரத்தையும் நினைவு கூறினார். எச்சரிக்கை செய்வதற்காக சிவகங்கை மாவட்டத்தில் 2024 ம் ஆண்டு - 1154 சாலை விபத்து நடந்ததாகவும் அதில் சம்பவ இடத்திலே 358 பேர் பலியான தகவலையும்: 791 பேர் காயம்காயமடைந்து நீண்ட காலமாக சிகிச்சை பெற்று வருவதாக எடுத்துரைத்தார். டூவீலர் விபத்தில் சிக்கி மரணமடைந்தவர்களில் 90 சதவீதம் பேர் சம்பவ இடத்திலே பலியானதையும் எடுத்துரைத்தார்.
அபாயகரமான வளைவு, அதிவேகம், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது உள்ளிட்டவைகளால் தினந்தோறும் விபத்துக்கள் நடப்பதால் சாலை விதிகளை பின்பற்றி விபத்திலா பயணம் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.