சிவகங்கை மாவட்டம் காரைக்குடி முடியரசன் சாலையில் பிரபல தனியார் சிட்பண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் தனியார் பேருந்து உரிமையாளர் லாரன்ஸ் என்பவர் சிட் பண்டு நிறுவனத்தில் ரூ 50 லட்சம் ஏலச்சீட்டு எடுத்து மாதம் தோறும் பணம் கட்டி வந்துள்ளார். இந்நிலையில் இந்த மாதம் ஏலம் எடுத்துள்ள நிலையில் தனியார் சீட் பண் கம்பெனி நிறுவனத்தினர் பணம் தராமல் இழுத்தடித்துள்ளார். இந்நிலையில் ஏலச்சீட்டு பணத்தை தராததை கண்டித்து தனியார் பஸ் நிறுவன உரிமையாளர் லாரன்ஸ் மற்றும் அவரைச் சார்ந்தவர்கள் சிட்பண்டு நிறுவனத்தின் அலுவலரை முற்றுகையிட்டு ஏலச்சீட்டு பணம் கேட்டு வாக்குவாதம் செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அங்கு வந்த காரைக்குடி வடக்கு காவல்துறை போலீசார் சிட்பண்டு நிறுவன அலுவலரிடம் பிரச்சனை குறித்து கேட்டு அறிந்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். முடியரசன் சாலை சிட்பண்டு நிறுவனத்தில் ஏலசீட்டு பணம் தராததால் ஏற்பட்ட வாக்குவாதத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.