அக்னிவீர்வாயு தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்

72பார்த்தது
இந்திய இராணுவத்தால் அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய விமான படையின் அக்னிவீர் வாயு 02/2025 பணிக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு திருமணமாகாத ஆண் மற்றும் பெண் இந்திய குடிமக்கள் இணைய வழியாக விண்ணப்பிக்கலாம். இத்தேர்வு வருகின்ற 18. 10. 2024 அன்று இணையதளம் வாயிலாக நடைபெற உள்ளது. இத்தேர்வில் கலந்து கொள்ள வருகின்ற 28. 07. 2024 அன்று 23: 00 மணி வரை ஆன்லைன் பதிவு செய்து கொள்ள கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், பதிவு மற்றும் தேர்வுக்கட்டணம் ரூ. 550/- + GST ஆகும். இத்தேர்விற்கு, விண்ணப்பிக்க ஜீலை-03, 2004 அல்லது அதற்கு பிறகு பிறந்தவர்கள் மற்றும் ஜனவரி-03, 2008 அல்லது அதற்கு முன் பிறந்தவர்களாக இருத்தல் வேண்டும். மேலும், இத்தேர்விற்கான கல்வி மற்றும் உடல் தகுதி குறித்த விவரங்களுக்கு www. agnipathvayu. cdac. in என்ற இணையதளம் மூலம் அறிந்து கொண்டு, விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் வருகின்ற 28. 07. 2024 க்குள் www. agnipathvayu. cdac. in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், இன்று காலை சுமார் பத்து மணி அளவில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி