சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள வெள்ளிப்பட்டி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிவர் கணேசன். இவர் நேற்று
கார் ஒன்றை புதிதாக வாங்கி உள்ளார். அதன் பின்பு அவரது மகனுடன் அந்த காரை காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக கல்லூரி சாலையில் ஓட்டி பழகி உள்ளார் அப்பொழுது பிரேக்குக்கு பதிலாக ஆக்சிலிட்டரை மிதித்ததால் கார் காவல்துறையினர் வைத்திருந்த பேரிக்காடு மீது மோதி இழுத்துச் சென்று கட்டுப்பாட்டை இழந்து பல்கலைக்கழக காம்பவுண்ட் சுவரை இடித்துக் கொண்டு உள்ளே சென்றது. அச்சமயம் கல்லூரி மாணவ மாணவிகள் யாரும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. கல்லூரி மாணவ மாணவிகள் 3 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் தங்கி படிக்கும் பல்கலைக்கழக வளாகத்தில் கார் ஓட்டி பழகிய கிராம நிர்வாக அலுவலர் கணேசன் காரை கைப்பற்றிய அழகப்பபுரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விஏஓ கணேசனிடம் விசாரணை செய்து வருகின்றனர்.