ஆயுஷ்மான் பாரத் அட்டை பதிவுக்கு ஆதார் அட்டை கட்டாயம்

539பார்த்தது
சிவகங்கை மாவட்டத்தில் மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் அட்டை பதிவு செய்ய ஆதார் அட்டை அவசியம் என மருத்துவத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் காப்பீடுத்திட்டம் கடந்த 2018 -ல் கொண்டு வரப்பட்டது. இத்திட்டம் முதலாவதாக யூனியன் பிரதேசங்களில் நடைமுறைப் படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் நடை முறைக்கு கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தில் சேரும் நபருக்கு ரூ. 5 லட்சம் காப்பீடு செய்யப்படுகிறது.

சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களை இத்திட்டத்தில் இணைக்கும் பணி கடந்த 6 மாதங்களாக நடைபெற்று வருகிறது. எனவே மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் மருத்துவக்காப்பீடு திட்டத்தில் சேர்வதற்கு ஆதார் அட்டையை அவசியம் கொண்டு வரவேண்டும். அனுமதிச் சீட்டு வழங்குமிடத்தில் ஊழியர்களுக்கு ஆதார் அட்டை எண்களை தெரிவித்து பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மருத்துவமனை அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி