தமிழகத்தில் சாலைகள் மேம்படுத்தப்பட்டு வந்தாலும், சாலை விபத்துகளின் எண்ணிக்கை குறையாமல், உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இவற்றுக்கான முக்கியக் காரணமாக, தனியார் பேரூந்துகளில் ஏற்படும் போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் ஓட்டுநர்களின் அஜாக்கிரதைகள் குறிப்பிடப்படுகின்றன. இந்நிலையில், சிவகங்கை மாவட்டம், மதுரையிலிருந்து சிவகங்கை வழியாக தொண்டி நோக்கி சென்ற தனியார் பேருந்து, படமாத்தூர் அருகே கரும்பாவூர் விளக்கு பகுதியில் சென்றபோது, அதில் பயணித்த படமாத்தூர் பகுதியைச் சேர்ந்த சுமித் என்ற இளைஞர், திடீரென உடல் நலக்குறைவால் பேருந்தில் இருந்து தடுமாறிய கீழே தவறி விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த வரை உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பேருந்துகளில் தானியங்கி கதவுகள் இல்லாததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது
அரசுப் பேருந்து மற்றும் தனியார் பேருந்துகளில் தானியங்கி கதவுகள் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பல தனியார் பேருந்துகளில் இவை பின்பற்றப்படாமை கேள்விக்குறியாக உள்ளது. இது போன்ற விபத்துகளை தவிர்க்க, தனியார் பேருந்துகளிலும் பாதுகாப்பு அம்சங்களை நடைமுறைப்படுத்த
வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.