பெண்ணின் தலையில் கல்லை போட்டு கொலை

529பார்த்தது
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூர் பேருந்து நிலையத்தில் தங்கி கடந்த இரண்டு மாத காலமாக 50 மதிப்பெண் மதிக்கத்தக்க ஆணும், 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் சாலை ஓரங்களில் கிடக்கும் மது பாட்டில்களை சேகரித்து கடைகளில் போட்டு அதில் வரும் பணத்தில் இருவரும் மது அருந்திவிட்டு இரவு நேரங்களில் சண்டை போட்டு வந்துள்ளனர்.

நேற்று (08.06.2024) சண்டை நடைபெற்ற போது வியாபாரிகள் அவர்களை விரட்டி விட்டுள்ளனர். இருவரும் பேருந்து நிலையத்திற்கு பின்புறம் உள்ள விநாயகர் கோவிலுக்கு இருவரும் சென்றுள்ளனர். இன்று (09.06.2024) காலை அப்பகுதிக்கு அப்பகுதி மக்கள் சென்ற பொழுது அங்கு உடலில் ஆடை இல்லாத நிலையில் அந்தப் பெண் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.

அவருடன் இருந்த ஆண் தலைமறைவாகிவிட்டார். தகவல் அறிந்து வந்த பள்ளத்தூர் காவல்துறையினர் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்து இறந்த பெண் யார் அவருடன் இருந்த நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி