காரைக்குடியில் சேவல் சண்டை: 6 பேர் கைது

4035பார்த்தது
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மையப் பகுதியில் அமைந்துள்ளது. ஐந்து விளக்கு பகுதி. மக்கள் அதி நடமாட்டம் உள்ள பரபரப்பான இப்பகுதியில் அரசு அனுமதியின்றி சேவல் சண்டை போட்டி நடைபெறுவதாக காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஸ்டாலினுக்கு ரகசிய தகவல் வந்தது. இதனை அடுத்து விரைந்து சென்ற காவல்துறையினர் சேவல் சண்டையில் ஈடுபட்டிருந்த முத்துக்குமார், சூர்யா, ராஜா முகமது, சரவணன், ராகவேந்திரா, கண்ணன் ஆகிய ஆறு பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 2 சேவல், 2 இரு சக்கர வாகனம், ரூ1430 ரொக்க பணத்தை பறிமுதல் செய்து, 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காரைக்குடி மையப் பகுதியில் அரசின் அனுமதியின்றி சேவல் சண்டை நடந்திருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. எனினும் விரைந்து செயல்பட்டு நடவடிக்கை எடுத்த போலீசாரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

தொடர்புடைய செய்தி