சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் கல்லூரியின் 55 ஆம் ஆண்டு விளையா்டு விழா கல்லூரித் தலைவர் அண. லெட்சுமணன் செட்டியார் தலைமையில் நடைபெற்றது. பொருளியல் துறைத் தலைவர் முனைவர் பரமசிவன் வரவேற்றார். விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத் துணைத் தலைவரும் திண்டுக்கல் ஸ்ரீ மகரிஷி வித்யா மந்திர் பள்ளியின் நிறுவுநருமான கோதைச்செல்வன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். சிறப்பு அழைப்பாளர்களாக தேவகோட்டை நகர் மன்றத் தலைவர் சுந்தரலிங்கம் நகர்மன்றத் துணைத் தலைவர் ரமேஷ் நகர் மன்ற உறுப்பினர்கள் ஐயப்பன் வீரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர். மாலை நடைபெற்ற நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட கோதைச்செல்வன் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் இக்கல்லூரியில் தான் படிக்கும் போது பெரிய வசதிகள் ஏதுமின்றிப் படித்தேன். இருப்பினும் இக்கல்லூரி தந்த கல்வியால் ஒரு பள்ளியை நிர்வகிக்கும் ஆற்றலை பெற்றிருக்கிறேன் எனப் பேசினார். விழாவில் கல்லூரியின் கல்லூரியின் பேராசிரியர்கள் அலுவலர்கள் மற்றும் மாணவ மாணவியர் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.