கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் உட்பட 50 பேர் கைது

51பார்த்தது
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சியின் வரியைவசூல் முறையை கண்டித்து காரைக்குடி தொழில் வணிக கழகம் மற்றும் வியாபாரிகள் அனைத்து கட்சியினர் கடையடைப்பு போராட்டம் 95 சதவீத வெற்றி அடைந்த நிலையில் வியாபாரிகள் மற்றும் ஆளும் திமுகவை தவிர்த்து திமுக கூட்டணி கட்சிகளும் எதிர்க்கட்சியினர் என அனைத்து கட்சிகளும் அனைத்து கட்சியினர் காரைக்குடி மாநகராட்சி முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர் அதன் பின்பு போராட்டம் முடிந்த பின்பு தாமதமாக வந்த பாஜகவினர் தங்களுக்கு பேசுவதற்கு மைக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். காவல்துறையினர் போராட்டத்திற்கு அனுமதி இல்லை என்று தெரிவித்ததை தொடர்ந்து பாஜகவினர் சாலையில் அமர்ந்தனர் அவர்களை காவல்துறையினர் கைது செய்வோம் என்று கூறியவுடன் வியாபாரிகள் ஒரு சிலரும் சமூக ஆர்வலர்கள் ஒரு சிலரும் அதற்கு எதிர்ப்பு முன்னதாக காவல்துறையினர் கைது செய்வோம் என்று கூறியவுடன் மாநகராட்சி அலுவலகத்துக்குள் நுழைய முயன்றவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினார். அதன் பின்பு பாஜகவினர் 30 பேர் சமூக ஆர்வலர்கள் 5பேர் வியாபாரிகள் 10 பேர் நாம் தமிழர் கட்சி முன்னாள் மாவட்ட அமைப்பாளர் மாறன் தலைமையிலான கட்சியினர் ஐந்து பேர் ஆக மொத்தம் 50க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து வேனில் ஏற்றி தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி