சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே சாத்தரசன்பட்டியில் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடத்தப்பட்டது. இரு பிரிவுகளாக நடத்தப்பட்ட போட்டியில், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பெரிய மாட்டு வண்டி பிரிவில் 13 ஜோடிகளும், இரு சுற்றுகளாக நடைபெற்ற சிறிய மாட்டில் 36 ஜோடி வன்டிகளும் பங்கேற்றன.
விறுவிறுப்பாக நடைபெற்ற
போட்டியில், வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கும், அதனை ஒட்டி வந்த சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. இதனிடையே, அதிவேகமாக ஓடிய இரண்டு மாட்டு வண்டி கட்டுபாட்டை இழந்து திடீரென குடை சாய்ந்ததில் 4 சாரதிகள் காயமடைந்தனர்.