சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஒத்தக்கடை அருகில் உள்ள சோதனைச் சாவடியில் சந்தேகத்திற்கு இடமாக சென்ற காரை நிறுத்தி சோதனை செய்த போது தடை செய்யப்பட்ட 26 கிலோ கஞ்சா போதை பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் ஆந்திராவிலிருந்து
இலங்கைக்கு கடத்த சொகுசு காரில் 2 கிலோ பாக்கெட்டுகளாக 13 பாக்கெட்டுகள் என மொத்தம் 26 கிலோ கஞ்சா போதைப் பொருளை பறிமுதல் கொண்டு சென்றது தெரியவந்து. தேவகோட்டை டிஎஸ்பி கௌதம் சம்பவ இடத்தில் நேரடி விசாரணை செய்தார் கஞ்சா கடத்திச் சென்ற சொகுசு காரை பறிமுதல் செய்து கேரள மாநிலத்தைச் சேர்ந்த அருண் விவித் ஆகிய இருவரையும் கைது செய்த
தேவகோட்டை நகர் போலீசார் கஞ்சா கடத்தல் சம்பவத்தில் ராமேஸ்வரத்தில் இருந்து யார்? மூலம் இலங்கைக்கு இவர்கள் கஞ்சாவை கடத்துகிறார்கள் என்ற பல்வேறு கோணத்தில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.