சிவகங்கை மாவட்டம்
தேவகோட்டை ஆனந்தா கல்லூரியின் 21 - வது கல்லூரி ஆண்டு விழா கல்லூரிச் செயலர் அருட்தந்தை முனைவர் செபாஸ்டியன் தலைமையேற்று வரவேற்புரை வழங்கினார். முதல்வர் அருட்தந்தை முனைவர் ஜான் வசந்தகுமார் கல்லூரியின் வளர்ச்சி நிலைகளை ஆண்டறிக்கையாக வாசித்தார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஆனந்தா கல்வி குழுமத்தின் தலைவரும் சிவகங்கை மறைமாவட்ட ஆயருமான முனைவர் லூர்து ஆனந்தம் பேசியதாவது, மாணவ, மாணவிகள் பலதுறையில் சிறந்தவர்களாகத் திகழ அடிப்படைக் கல்வி, வாசிப்பு பழக்கம், எதிக்கால இலச்சியத்தை மனதில் கொண்டு வாழ்க்ககையை அமைத்துக்கொள்ளும் ஆர்வம் உடையவர்களாக இருக்க வேண்டும். பல்வேறு அறிஞர்களின் வாழ்வியல் பதிவுகளை மாணவ, மாணவிகள் வாசித்து தெரிந்துகொண்டு அதன்வழி நடக்கவேண்டும். மற்றோரு சிறப்பு விருந்தினர்களாகிய கல்லூரியின் முன்னாள் மாணவர்களாகிய முனைவர் மரிய ஏன்ஜெலின் சிந்தியா, வடிவேலன் ஆகியோர்கள் பேசுகையில், மாணவர்கள் வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தி குடும்பச் சூழலை உணர்ந்து வாழ்க்கையில் முன்னேற்றம் அடையவேண்டும் என்று சிறப்புரை வழங்கினார்கள். பல்கலைக் கழகத் தேர்வு, கலை, விளையாட்டு மற்றும் கல்லூரியில் சிறந்து விளங்கி தடம் பதித்த மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.