சிவகங்கை காரைக்குடி
போக்குவரத்து நகர் 5-வது வீதியைச் சேர்ந்த வேட்டையப்பன் (57). மனைவி மாலதி. இவர் கடந்த ஜூன் 2-ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு சென்னையில் உள்ள மகள் வீட்டுக்குச் சென்றார். இந்நிலையில் ஜூன் 4-ம் தேதி வீட்டுக்கு வந்தபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 13 பவுன் நகைகள், வெள்ளிக் கொலுசுகள் திருடுபோய் இருந்தன. இதுகுறித்து மாலதி அளித்த புகாரின் பேரில் குன்றக்குடி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.