சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சிலம்பனி ஊரணி அருகில் ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்ப சுவாமி கோயில் உள்ளது. அங்கு 39ம் ஆண்டு மண்டலபூஜை நடைபெற்று வருகிறது. கடந்த 23ம்தேதியன்று காலையில் பாலாபிஷேகம் நடைபெற்றது. மாலையில் பொன்னூஞ்சல் நிகழ்ச்சி நடைபெற்றது. 24ம்தேதியன்று ஏகதின லெட்சார்ச்சனை நடைபெற்றது. 25ம்தேதி காலையில் திருஆபரண பெட்டி எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலையில் மஞ்சள்மாதா பவனி நடைபெற்றது. அதன்பின்னர் உலக நன்மை வேண்டியும் விவசாயம் செழிக்கவும் 1008 திருவிளக்கு பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் பல நூற்றுக்கணக்கில் பெண்கள் பங்கேற்றனர்.