வீரமும், விவேகமும் விளைந்த மண் சிவகங்கை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய பின் நிகழ்ச்சியில் பேசிய அவர், சிவகங்கை மாவட்டத்தை வளர்த்ததில் திமுக ஆட்சிக்கு முக்கிய பங்கு உள்ளது.
இந்த மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களை திமுக அரசு கொடுத்துள்ளது. எல்லோருக்கும் எல்லாம் என்ற நோக்கில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். சட்டப்பேரவைத் தேர்தலில் கொடுத்த 505 வாக்குறுதிகளில் 389-ஐ இதுவரை நிறைவேற்றியுள்ளோம் என்றார்.