புகைப்பழக்கத்தை விட ஒரே இடத்தில் பல மணி நேரம் உட்கார்ந்துகொண்டே இருப்பதால் அதிக உயிரிழப்புகள் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது. ஒரே இடத்தில் பல மணி நேரம் உட்கார்ந்துகொண்டே இருப்பதால், உடலில் ரத்த ஓட்டம் குறைந்து போகலாம். மேலும், ஆங்காங்கே ரத்தம் உறைதல் மற்றும் மூளை குறைவாக செயல்படுவது போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். அதிகம் எழுந்து நடக்காமல் இருப்பதால், உடலில் மெட்டபாலிசம் குறைய வாய்ப்புள்ளது. இதனால், உடலில் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் திறன்கள் குறைவதாக கூறப்படுகிறது.