மனஅழுத்தம் இன்று பலரையும் பாதிக்கும் முக்கிய பிரச்சினையாக உள்ளது. இதை குறைக்க தினமும் 30 நிமிடம் நடைப்பயிற்சி செய்யலாம். பசுமையான சூழலில் சிறிது நேரம் செலவிடலாம். இசை கேட்பது, புத்தகம் வாசிப்பது என பிடித்த ஹோபிக்களை செய்யலாம். சிறிய பயணங்களை மேற்கொள்ளலாம். நெருங்கியவர்களுடன் இது குறித்து பேசி தீர்வு காணலாம். தேவைப்பட்டால் மனநல ஆலோசகரிடம் ஆலோசனை பெறலாம். மேலும், எதிர்மறையான எண்ணங்களை தவிர்ப்பது முக்கியமானதாகும்.