கை மற்றும் தொடை இடுக்குகளில் ஏற்படும் அதீத உராய்வு காரணமாக அந்த பகுதிகள் மிகவும் கருமை நிறத்தில் காணப்படும். இந்த கருப்பை நீக்குவதற்கு எளிய தீர்வு ஒன்று உள்ளது. பெரிய உருளைக்கிழங்கை எடுத்து இரண்டு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். இதை கருப்பாக இருக்கும் பகுதிகளில் ஐந்து நிமிடங்கள் மசாஜ் செய்து பின்னர் குளிர்ந்த நீரில் கழுவி விட வேண்டும். தொடர்ந்து இவ்வாறு செய்து வருவதால் இந்த பகுதியில் உள்ள கருமைகள் நீங்கும்.