தக்காளியை அரைத்து சாறை மட்டும் தனியாக வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் இரண்டு துளிகள் எலுமிச்சை பழச்சாறு, ஒரு ஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலக்க வேண்டும். இந்த கலவையை கைகளில் இடுக்குகளில் சேர்த்து சுமார் மூன்று நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் பத்து நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீர் கொண்டு கழுவினால் அக்குள் பகுதிகளில் இருக்கும் கருமைகள் மறையும்.