பட்டு Vs பருத்தி.. திருமணத்திற்கு எந்த புடவை நல்லது?

63பார்த்தது
பட்டு Vs பருத்தி.. திருமணத்திற்கு எந்த புடவை நல்லது?
இந்திய கலாச்சாரத்தில் மிகமுக்கிய விஷயமாக கருதப்படுவது திருமணம். திருமணத்தில் மணமகன் வீட்டார், மணமகளுக்கு கூறைப்புடவை எடுத்து கொடுப்பர். இன்றளவில் பலரும் பட்டுப்புடவையை நோக்கி தங்களின் கவனத்தை திருப்பியுள்ளனர். பட்டுப்புடவை பட்டுப்புழுக்களிடம் இருந்து உருவாக்கப்படுகிறது. மணப்பெண் உடுத்திய புடவையை தானம் அளிக்க சாஸ்திரம் சொன்னாலும், பட்டுப்புடவையை யாரும் வழங்குவதில்லை. இல்லறத்தில் இணையும் தம்பதிக்கு, இயற்கையால் கிடைக்கும் பருத்தி துணியே நல்லது. மஞ்சள் நீரில் நனைத்து உலர்த்தி, பின் திருமண புடவை அணிவது பல கிராமங்களில் இன்றும் தொடர்கிறது.

தொடர்புடைய செய்தி