கோயம்புத்தூர்: குற்றவாளிகளிடம் இருந்து நகை மற்றும் பணத்தை பறித்த சப்-இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பொள்ளாச்சியில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளிடம் இருந்து எஸ்.ஐ. நவநீதகிருஷ்ணன் பணம், நகை வாங்கியுள்ளார். இதனால் கோவை எஸ்.பி., கார்த்திகேயன் எடுத்த நடவடிக்கையால் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அவரிடம் இருந்து ரூ.50,000 வாங்கிய மேட்டுப்பாளையம் எஸ்.ஐ. மகாராஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.