ஜெர்மனியில் அணு உலைகள் மூடல்

1857பார்த்தது
ஜெர்மனியில் அணு உலைகள் மூடல்
ஜெர்மனி ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அணுசக்தி பயன்பாட்டை நிறுத்துவதாக ஏற்கனவே அறிவித்த ஜெர்மனி, தற்போது செயல்பட்டுவரும் கடைசி மூன்று அணு உலைகளையும் மூடிவிட்டது. அணுசக்தியை பயன்படுத்தும் மிகவும் சக்திவாய்ந்த நாடுகளில் ஒன்றான ஜெர்மனி, கடந்த ஆண்டு இந்த அணு உலைகளை மூட முடிவு செய்தது. இருப்பினும், ரஷ்யா-உக்ரைன் போரின் விளைவுகளால், மின் நெருக்கடி தொடர்ந்ததால் இந்த முடிவில் கால தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் அணு சக்தி பயன்பாட்டிலிருந்து முழுமையாக வெளியேறுவதாக ஜெர்மனி அறிவித்துள்ளது. இந்த முடிவை எடுக்கும் முதல் ஐரோப்பிய நாடு ஜெர்மனி என்பது குறிப்பிடத்தக்கது.