மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் பன்ஹேரி கிராமத்தின் விக்ரம் ராவத் (35) என்ற நபர் பட்டப்பகலில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். வழக்கறிஞரை சந்திக்க வந்த விக்ரம் ராவத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
காங்கிரஸ் ஆதரவாளராக கருதப்படும் விக்ரம் ராவத்தை கிராமத்தில் உள்ள அவரது எதிரிகள் கொலை செய்திருக்கலாம் என அவரது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர. பட்டப்பகலில் சாலையில் நடந்த இந்த கொடூர கொலை தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.