கொலம்பியா நாட்டின் அதிபர் வேட்பாளரான மிகுயல் உரிப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நாட்டில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. எதிர்க்கட்சியான பழமைவாத ஜனநாயக மையம் கட்சியை சேர்ந்த எம்.பி. மிகுயல் உரிப் (39), அதிபர் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். இவர் பொகொடாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தபோது திடீரென அவர் மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்பட்டது.