நிலத்தகராறில் நடந்த இரட்டைக்கொலை சம்பவம் செங்கல்பட்டை அதிர வைத்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரை சேர்ந்தவர்கள் விமல், ஜெகன் நண்பர்கள். 20 வயதுடைய இவர்கள் மீது காவல் நிலையத்தில் 20 குற்றவழக்குகள் இருக்கின்றன. சம்பவத்தன்று அதிகாலை நேரத்தில் இருவரும் கொடூரமாக கொல்லப்பட்டனர். விசாரணையில், விமலின் அத்தை நிலத்தகராறு விஷயத்தில் படுகொலை சம்பவத்தை அரங்கேற்றியது அம்பலமானது. காவல் துறையினர் சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.