OTT தளங்களில் மிகவும் பிரபலமான நெட்பிளிக்ஸ் தளத்தின் பாஸ்வேர்டை பகிரும் வசதி நிறுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நான்காம் காலாண்டு வருவாய் தொடர்பாக நெட்பிளிக்ஸ் வெளியிட்ட அறிவிப்பில், 2023 டிசம்பர் மாதத்துடன் 1.31 கோடி சந்தாதாரர்கள் நெட்பிளிக்ஸ் கணக்கு வைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், சந்தா கட்டணத்தை விரைவில் உயர்த்த உள்ளதாகவும் நெட்பிளிக்ஸ் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நெட்பிளிக்ஸ் பயனர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.