நாமக்கல் அருகே ஆர்டிஓ மற்றும் அவரது மனைவி கடன்சுமையால் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. வகுரம்பட்டி அருகே தண்டவாளத்தில் தில்லைபுரத்தைச் சேர்ந்த ஆர்டிஓ சுப்ரமணியன் (54), மனைவி பிரமிளா ஆகியோர் உடல் துண்டான நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டனர். மகன், மகளின் படிப்புக்காக வாங்கிய கடன் அதிகரித்ததால் தற்கொலை முடிவை எடுத்துள்ளதாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.