கடந்த ஐந்து ஆண்டுகளில் பீகார், உ.பி உள்ளிட்ட 5 மாநிலங்களில், கணவர்கள் கொலை செய்யப்பட்டது, அல்லது ஆள் வைத்து கொன்றது போன்ற வழக்குகளில் 785 மனைவிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் மட்டும் 274 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, பீகார் 188, ராஜஸ்தான் 138, மகாராஷ்டிரா 100, மத்திய பிரதேசம் 87 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. NCRB குற்றத்தரவுகளின் தகவல்கள் மூலம் இது தெரியவந்துள்ளது.