பீகார்: கோபால்கஞ்ச் மாவட்டத்தில் முகத்தில் ஆசிட் ஊற்றப்பட்ட நிலையில் சாக்கு மூட்டையில் கிடந்த இளம்பெண் சடலத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. லக்ராவ் பாக் பகுதியில் சுமார் 25 வயதுடைய இளம்பெண் சடலமாகக் கிடந்தார். அவரது முகத்திலும் உடலிலும் பலத்த காயங்கள் காணப்பட்டதுடன், ஆசிட் ஊற்றப்பட்டிருந்தது. இதையடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்து, தடயவியல் நிபுணர்களுடன் ஆதாரங்கள் சேகரித்து வருகின்றனர். இது தொடர்பாக காணாமல் போனவர்களின் பட்டியலை வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.