அமித்ஷா முன் ‘ஜெய் குஜராத்’ கோஷமிட்ட ஷிண்டேவுக்கு கடும் எதிர்ப்பு

42பார்த்தது
அமித்ஷா முன் ‘ஜெய் குஜராத்’ கோஷமிட்ட ஷிண்டேவுக்கு கடும் எதிர்ப்பு
மகாராஷ்டிராவின் புனேயில் நேற்று (ஜூலை 4) நடந்த நிகழ்ச்சியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துக் கொண்டார். அப்போது பேசிய துணை முதல்வர் ஷிண்டே, ‘ஜெய் ஹிந்த், ஜெய் மகாராஷ்டிரா, ஜெய் குஜராத்’ என்று கோஷமிட்டார். அமித்ஷாவும் குஜராத்தி மொழியில் தனது உரையை நிகழ்த்தினார். இந்நிலையில், ‘ஜெய் குஜராத்’ என ஷிண்டே முழக்கமிட்டது சர்ச்சை ஆகியுள்ளது. தனது பதவியையும் கட்சியையும் காப்பாற்றி கொள்ள மகாராஷ்டிராவை அவமதித்த ஷிண்டே ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன.

தொடர்புடைய செய்தி