நடிகரும், கராத்தே பயிற்சியாளருமான ஷிஹான் ஹூசைனி மறைந்ததை அடுத்து, இறுதிவரை அவரை மருத்துவமனையில் இருந்து கவனித்து கொண்ட மாணவியின் உருக்கமான பேச்சு கண்ணீரை வரவழைத்துள்ளது. காம்னா என்ற மாணவி, "ஹூசைனி ஒரு பயிற்சியாளராக மட்டுமின்றி தனக்கு ஒரு அப்பாவாக இருந்தார். அவரது கடைசி ஆசை, வில்வித்தையில் தமிழகத்திற்கு ஒரு ஒலிம்பிக்கில் கோல்டு மெடல் வாங்க வேண்டும் என்பதுதான். அவருக்காக நான் நிச்சயமாக ஒலிம்பிக் மெடல் வெல்வேன்" என கண்ணீருடன் கூறியுள்ளார்.