இந்திய பங்குச் சந்தை கடந்த 2 நாட்களாக ஏறுமுகத்தில் உள்ளது. குறிப்பாக புகையிலை பொருட்கள் விற்பனை, உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் பங்குகள் கணிசமாக உயர்ந்துள்ளன.
காட்ஃப்ரே பிலிப்ஸ் இந்தியாவின் அங்கமான எலைட்கான் இன்டர்நேஷனல் லிமிடெட் பங்குகள் நேற்று ரூ.571.05 இல் நிறைவடைந்தது. கூடுதலாக, இந்தப் பங்கின் விலை 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு ரூ.571.05 என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு ரூ.11.02-ல் இருந்து தற்போது ரூ.571.05-ஐ எட்டி இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.