விஜய பிரபாகரனுக்காக களத்தில் குதித்த தம்பி சண்முக பாண்டியன்

23799பார்த்தது
விருதுநகர் மக்களவை தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் விஜய பிரபாகரனுக்கு ஆதரவாக அவரது தம்பி சண்முக பாண்டியன் நேற்று தீவிர பரப்புரை மேற்கொண்டார். அருப்புக்கோட்டை நகர் பகுதிகளான பாவடி தோப்பு, காந்தி மைதானம் வேலாயுதபுரம், புதிய பேருந்து நிலையம், நெசவாளர் காலனி, ராமசாமிபுரம், எம்.எஸ் கார்னர் ஆகிய பகுதிகளிலும், வதுவார்பட்டி, வாழ்வாங்கி, பந்தல்குடி உள்ளிட்ட 19 கிராமங்களுக்கும் சென்று வாக்கு சேகரித்தார். தொடர்ந்து காந்திநகர் பகுதியில் உள்ள டீக்கடையில் தொண்டர்களுக்கு டீ போட்டுக் கொடுத்து தானும் டீ குடித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.‌

மேலும் பிரச்சாரத்தின் போது பேசிய சண்முக பாண்டியன், கேப்டன் விஜயகாந்தின் மறு உருவமாக விஜய பிரபாகரன் உள்ளார். அவருக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தால் விஜயகாந்த் ஆன்மா சாந்தி அடையும். முரசு தினத்திற்கு நீங்கள் வாக்களித்து அண்ணன் விஜய பிரபாகரனை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என பேசினார்.

தொடர்புடைய செய்தி