மாணவனுக்கு பாலியல் தொல்லை.. ஆசிரியர் கைது

561பார்த்தது
மாணவனுக்கு பாலியல் தொல்லை.. ஆசிரியர் கைது
காஞ்சிபுரம் மாவட்டம் செவிலிமேடு பகுதியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக காமேஷ் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இவர் நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக தனது சைக்கிளை எடுக்க வந்த 11ஆம் வகுப்பு மாணவனுக்கு, பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் வீட்டிற்கு சென்ற பிறகும் மாணவனின் செல்போனுக்கு பாலியல் ரீதியான குறுஞ்செய்திகளை அனுப்பி தொல்லை கொடுத்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவனின் பெற்றோர் காஞ்சிபுரம் காவல்நிலையில் புகார் அளித்துள்ளனர். போக்ஸோ சட்டத்தில் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி