உத்திரபிரதேசம் மாநிலம் கோண்டா மாவட்டத்தில், நீதிமன்ற அலுவலத்தில் வேலை பார்த்து வருபவர் ஹரிவன்ஷி சுக்லா. இவர் சில மாதங்களில் பணி ஓய்வு பெறவுள்ளார். இதனிடையே, நீதிமன்ற அலுவலகத்தில் தன்னுடன் பணியாற்றி வரும் பெண் ஊழியரிடம் வேலை நிரந்தரம் செய்வதாக பாலியல் இச்சைக்கு இணங்க வற்புறுத்தி இருக்கிறார். இதுகுறித்த வீடியோ வெளியாகிய நிலையில், மாவட்ட நீதிபதி நேஹா சர்மா ஹரிவன்ஷியை பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். விசாரணை நடந்து வருகிறது.