தமிழக அரசின் சட்டம் ஒழுங்கின் மீது குற்றம் செய்ய நினைப்பவர்களுக்கு பயம் இல்லாததால் தான் குற்றங்கள் நடக்கிறது என தமாகா தலைவர் ஜி.கே வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரின் X பதிவில், "சென்னை தாம்பரம் அரசு சேவை இல்லத்தில் படித்த 8 ஆம் வகுப்பு மாணவி பாலியல் தொந்தரவுக்கு ஆளாகினார். தமிழ்நாட்டில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவது நீடிப்பது மிகவும் வேதனைக்குரியது" என தெரிவித்துள்ளார்.