சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் இளம்பெண்ணை ஆட்டோவில் கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தல் கொடுத்தவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும், கைதான ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்ட 2 பேருக்கு வரும் 21ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க செங்கல்பட்டு கூடுதல் மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இரவு நேரம் என்பதால் பேருந்து வராது எனக்கூறி இளம்பெண்ணை ஆட்டோவில் கூட்டிச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்தனர்.