சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக பல்கலை., பதிவாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “மாணவியின் புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க பாதுகாப்பை மேலும் பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். காவல் துறை விசாரணைக்கு பல்கலைக்கழகம் சார்பில் முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.