பாலியல் வன்கொடுமை.. பாடகி சின்மயி பரபரப்பு பதிவு

79பார்த்தது
பாலியல் வன்கொடுமை.. பாடகி சின்மயி பரபரப்பு பதிவு
கர்மாவும் கடவுளும் பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு பதிலடி கொடுக்கட்டும் என பாடகி சின்மயி கூறியுள்ளார். அவர் தனது முகநூல் பக்கத்தில், "கடந்த சில வருடங்களாக பொய்யர், விபச்சாரி, அட்ஜஸ்ட்மெண்ட் செய்துகொண்ட பெண் என்றப் பல விமர்சனங்களை எதிர்கொண்டேன். அது எல்லாவற்றையும் ஒரே மூலமான கடவுளுக்கே அர்ப்பணிக்கிறேன். இந்தக் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு தப்பிப் பிழைத்த அனைவருக்கும் இப்போது எனக்குக் கிடைக்கும் ஆதரவைப் பெறட்டும். உண்மை வெல்லட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.