சென்னை தாம்பரத்தில் செயல்பட்டு வரும் அரசு சேவை இல்லத்தில், 13 வயதுடைய சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த விஷயத்தில் காவல்துறையினர் விசாரணைக்குப் பின்னர், சேவை இல்லத்தின் செக்யூரிட்டி மேத்யூ (50) கைது செய்யப்பட்டார். சம்பவத்தன்று விடுதியின் பெண் காப்பாளர் விடுப்பில் சென்றுள்ளார். இதனால் யாரும் இல்லை என்ற தனிமை சூழலைப் பயன்படுத்தி கொடூரன் மேத்யூ அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த சிறுமியின் கால்களையும் உடைத்து வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.