பாலியல் குற்றவாளி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

63பார்த்தது
பாலியல் குற்றவாளி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு
தமிழ்நாட்டை அதிரவைத்த சென்னை அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் 2024 டிசம்பர் 25இல் ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி விசாரித்தார். ஞானசேகரன் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதால் அவர் குற்றவாளி என்று சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி இன்று தீர்ப்பளித்துள்ளார். அதன்படி 30 ஆண்டுகள் தண்டனை குறைப்பு இல்லாத ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதோடு ரூ.90,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி