வார இறுதி மற்றும் பண்டிகை நாட்களில், கூட்டம் அதிகமாக இருப்பதால், அரசு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்வது சுலபம் என அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து SETC மேலாண் இயக்குநர் ஆர். மோகன் கூறுகையில், "முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்வதன் மூலம் தேவையற்ற மன உளைச்சலை தவிர்க்கலாம். மேலும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசல்களில் சிக்கி தவிக்க வேண்டிய அவசியம் இல்லை" என்றார்.