செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மே 15க்கு ஒத்திவைப்பு

62பார்த்தது
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மே 15க்கு ஒத்திவைப்பு
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு உச்ச நீதிமன்றத்தில் மே 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வாதங்களை முன்வைக்க அமலாக்கத்துறை 5 நாட்கள் அவகாசம் கோரியதால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. அமலாக்கத்துறைக்கு அவகாசம் வழங்க செந்தில் பாலாஜி தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஏற்கனவே பலமுறை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் என செந்தில் பாலாஜி சென்ற அனைத்து நீதிமன்றங்களிலும் அவரது ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜுன் 14ஆம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
கடந்த வாரம், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை, 36வது முறையாக ஜூன் 4ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

தொடர்புடைய செய்தி