செந்தில் பாலாஜி ஜாமீனில் விடுவிக்கப்பட்டதையடுத்து அவரை வருக வருக என வரவேற்கிறேன் என முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். இந்த பதிவை மேற்கோள் காட்டிய பிரபல குணச்சித்திர நடிகர் சவுந்தரராஜா, “முதல்வர் அவர்களுக்கு, செந்தில் பாலாஜி தியாகி ஒன்றும் இல்லை. அவர் ஒரு ஊழல் குற்றவாளி. வழக்கு இன்னும் முழுமையாக முடியவில்லை. நீங்கள் இப்படி கூறுவது வருத்தம் அளிக்கிறது.” என பதிவிட்டுள்ளார்.