அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் ரத்தம், இசிஜி, எக்கோ உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. கால் மரத்துப்போனதாகக் கூறியதால் அவர் வீல் சேரில் வைத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தற்போது மருத்துவ பரிசோதனைக்கு பின் செந்தில் பாலாஜி மீண்டும் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். கடந்த ஜுன் மாதம் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். தொடர்ந்து நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, முதலில் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் தனியார் மருத்துவமனையில் பைபாஸ் இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது.